Wednesday, October 8, 2014

மகாவிஷ்ணு
மும்மூர்த்திகளுள்,ஒருவர் மகாவிஷ்ணு. இவர் திருமால், பெருமாள், மாயன், நாராயணன் என்றெல்லாம் அழைக்கபடுகிறார். விஷ்ணு என்றால் எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள். அதனால் தான் கடவுள் எங்கும் உள்ளார் என்று கூறுகின்றோம்.
விஷ்ணு இப்பிரபஞ்சத்சிதைக் காக்கும் கடவுள் ஆவார். இவருடைய நாயகி திருமகள்.
இவர் பாற்கடலில் ஆதிசேஷன் எனும் சர்ப்பத்தின் மீது சயனித்திருப்பார்.
அவருடைய வாகனம் கருடன்.
பகவான் விஷ்ணு நான்கு கரங்களை உடையவர். அவற்றில் சங்கு, சக்கரம், கதை, தாமரை முதலியவற்றை அவர் தாங்கியுள்ளார்.
அவரிடமிருந்தே நீர், நிலம், தீ, ஆகாசம், காற்று ஆகிய ஐம்பூதங்கள் தோன்றின என்பதனை சங்கு குறிக்கின்றது.
சக்கரம் பிரபஞ்சமனத்தினை காட்டுகிறது. மனம் சக்கரதினை போல கூர்மையானது, விரைவாக இயங்க கூடியது. கதை, ஞானத்தையும், தாமரை அருளாற்றலையும் குறிக்கிறது.
பகவான் விஷ்ணு இப்பிரபஞ்சத்தின் நன்மைக்காகவும், தீய சக்திகளை அழித்து உயிர்களை காப்பதற்காகவும் பல அவதாரங்களை எடுத்தார். அவை மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதராம், வாமன அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், புத்த அவதாரம் மற்றும் பத்தாவதாக வரவிருக்கும் கல்கி அவதராம்.
பகவான் விஷ்ணு நிற்கும் கோலத்தில், அவரது ஒரு கரம் பாசத்தினையும், மற்றொன்று பக்தனையும் நோக்கியுள்ளது. பக்தன் கடவுளிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்து, தஞ்சம் புகுந்தால் அவர், அவனை காப்பார் என்பதனையே இது காட்டுகிறது.
சென்னைக்குப் பக்கத்திலே, ஆந்திரா மாநிலத்தில், திருப்பதி எனும் புகழ் பெற்ற திருத்தலம் இருக்கிறது. தினமும் 50,000 முதல் 100,000 வரை பக்தர்கள் வரக் கூடிய, உலகின் மிகவும் பணவளம் மிக்க கோவில்களில் ஒன்றான இக் கோவிலிலே, இறைவனை நின்ற கோலத்தில் காணலாம்.
வட இந்தியாவின், உத்தர பிரதேசத்தில் உள்ள பத்திரிநாத் ஆலயத்தில் பகவான், நரசிம்மராக, உட்காந்து இருக்கும் கோலத்தில் காணலாம்.
தமிழ் நாட்டின் ஸ்ரீரங்கம், மற்றும் கேரளா, திருவனந்தபுரம், ஸ்ரீ பத்மநாபசாமீ ஆலயங்களில் பகவான் சயனிக்கும் நிலையிலும் காணலாம். (திருவனந்தபுரம், ஸ்ரீ பத்மநாபசாமீ ஆலயத்தின் கீழே, 130 வருடங்களுக்கு பின்னர், இந்திய உச்ச நீதிமன்ற உத்தரவு படி, அண்மையில் திறக்கப்பட்ட 6 பாதாள அறைகளில் 1 பில்லியன் அமரிக்க டொலர்கள் பெறுமதியான இறைவனுக்கு உரிய சொத்துகள் உலகை வியக்க வைத்தன).
சிவபெருமானை வழிபட்டு, இறை புகழ் பரப்பிய 63 நாயன்மார்களில் பாடல்கள் பாடிய நால்வர் போலே, மஹா விஷ்ணுவினை பாடிய ஆழ்வார்கள் பன்னிருவர் குறித்து நாம் பின்னர் படிப்போம்.
இப் பன்னிரு ஆழ்வார்களும் 108 'திவ்விய தேசங்கள்' (பகவானின் புனித தலங்கள்) குறித்து பாடி உள்ளார்கள். இந்த 108 தலங்களில், 106 இவ்வுலகத்திலும், 'வைகுந்தம்', 'இறைவனின் பொற் பாதங்கள்' ஆகிய, மிகுதி இரண்டும் மறு உலகிலும் உள்ளன.
ஆகவே பிறவித் துன்பத்தினால் துடைக்கவல்ல மகாவிஷ்ணுவை வணங்கித் துன்பமற்ற வாழ்கை வாழ்வோமாக.
இப்போது நாம், இறைவனின் திருஅவதாரங்கள் குறித்து பார்க்கலாம்.
இப்போது விஷ்ணு பகவான் மீது MS சுப்புலச்சுமி அவர்கள் பாடிய அற்புதமான பாடல் ஒன்றினைக் கேட்போமா!

No comments:

Post a Comment